சைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி - அனுமதி கோரி விண்ணப்பம்
சைகோவ் டி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சைடஸ் கேடிலா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
சைகோவ் டி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சைடஸ் கேடிலா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
அகமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கேடிலா மருந்து நிறுவனம் சைகோவ் டி என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
பிளாஸ்மிட் டி.என்.ஏ அடிப்படையிலான இந்த தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களை கொண்டதாகும்.
இந்நிலையில், சைகோவ் டி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சைடஸ் கேடிலா விண்ணப்பம் அளித்துள்ளது.
நாட்டிலுள்ள 50-க்கும் மேற்பட்ட மையங்களில் பல்வேறு நபர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு, இரண்டுகட்ட மருத்துவ பரிசோதனை நிறைவடைந்திருப்பதாக சைடஸ் கேடிலா தெரிவித்துள்ளது.
மேலும், சைகோவ் டி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதனை 12 வயது சிறார்களுக்கு தொடங்கி அனைவருக்கும் செலுத்தமுடியுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோய்த் தொற்றுக்கு எதிராக 66 சதவீதம் செயல்திறன் கொண்ட இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டால், 45 முதல் 60 நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியுமென சைடஸ் கேடிலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வீல் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சைடஸ் கேடிலா நிறுவனத்தில் தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே ஆய்வு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

