"கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இன்னும் முடியவில்லை"- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுறுத்தல்
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் சுகாதார கட்டமைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும், இரண்டாம் அலை தாக்கம் இன்னும் முடியவில்லை என்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் எந்தக் தொய்வும் இருக்கக் கூடாது என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கேட்டுக் கொண்டார்.
Next Story

