ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் - பிரதமர் நரேந்திர மோடி

தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான நடைமுறை துவங்கும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
x
தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான நடைமுறை துவங்கும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.  மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான நடைமுறை துவங்கும் என்றார். அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் பயன்பெறும் வகையில் நாட்டு நலனுக்காக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.  ஜம்மு-காஷ்மீரில் வாழும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் என பிரதமர் மோடி கூட்டத்தில் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்