பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.
x
கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன். கேரள மாநிலம் கொல்லம் அடுத்த மயிலக்காடு பகுதியைச் சேர்ந்த 
பதருதீன், ஆரம்ப காலத்தில் குற்றவியல் நீதிமன்றத்தில் பெஞ்ச் கிளர்க்காகத் தனது பணியைத் துவங்கினார். பெஞ்ச் கிளர்க்காக பணியாற்றிய போது, சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றி, பின்னர் மாவட்ட நீதிபதி தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தொடர்ந்து திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறிய பதருதீன், பல்வேறு பதவிகளை அடைந்து தற்போது கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தினேசன் பொன்னானி, அப்துல் கபூர், சந்திரசேகர் தாஸ், சிவராஜ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா ஆகியோர் அடித்தட்டிலிருந்து தங்கள் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story

மேலும் செய்திகள்