ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.
ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை
x
ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. 

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல் குறித்து, அவர் தெரிவித்த கருத்தை தொடர்ந்து, ஆயிஷா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர், கவரத்தி  காவல்நிலையதில், விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இதனிடையே, ஆயிஷா சுல்தானாவிற்கு லட்சத்தீவு  பேரிடர் மேலாண்மை ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. கொரோனா காலத்தில் வெளியில் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. இதை பொருட்படுத்தாமல் ஆயிஷா வெளியில் சுற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களை ஆயிஷா பின்பற்றவில்லை என்றும், நீதிமன்றம் வழங்கிய சலுகையை துஷ்பிரயோகம் செய்ததாக,  லட்சத்தீவு நிர்வாகம் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஆவணங்கள்  சமர்ப்பித்துள்ளது. தேசத்துரோக வழக்கில் ஆயிஷா கைது செய்யப்பட்டால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது

Next Story

மேலும் செய்திகள்