தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்
x
கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கி வருகிறது பினராயி விஜயன் தலைமையிலான அரசு...

ஒரு மாதத்திற்கு முன்னர், பந்தனம்திட்டா மாவட்டம் பெரிங்கநாட்டை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி அன்னெட் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அதில் இலவசமாக வழங்கப்படும் உணவு பொருட்களில் தங்களுக்கு தின்பண்டம் வழங்க வேண்டும் என கோரிக்கையை வைத்திருந்தார்.

இந்த கடிதம் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்ல, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான ஜி.ஆர் அனிலை தொடர்புகொண்டு மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்.

அடுத்த மாதம் முதல் இலவசமாக தின்பண்டம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அறிவிப்போடு நில்லாமல், கடிதம் எழுதிய மாணவி அன்னெட்டை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அனில். 

ரேசன் பொருட்களுடன் தாயார் வரும் போது, தின்பண்டம் கேட்டு திட்டு வாங்கிய நிலையில், அவருக்கு தெரியாமல் எழுதிய கடிதத்தால் கோரிக்கை நிறைவேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் மாணவி அன்னெட்..

Next Story

மேலும் செய்திகள்