கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள் - மக்கள் கடும் அவதி

மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
x
மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் ஜூமி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கடைகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளம் மற்றும் மழை நீரால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 50 சதவீத கடால் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இது குறித்து வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த வெள்ள அபாயம் ஜூன் முதல் அக்டோபர் வரை நீடிக்கும் எனவும், கடைகள் வைத்திருப்பவர்கள் இந்த சூழலில் வருமானம் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற சூழலில் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல படகை உபயோகித்துக் கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்