பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76.72 லட்சம் டன் தானியங்கள் வினியோகம் - இந்திய உணவு கழகம் தகவல்

ஜூன் 21 வரை, பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 72 ஆயிரம் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது
பிரதமரின்  உணவுத் திட்டத்தின் கீழ் 76.72 லட்சம் டன் தானியங்கள் வினியோகம் - இந்திய உணவு கழகம் தகவல்
x
ஜூன் 21 வரை, பிரதமரின்  உணவுத் திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 72 ஆயிரம் டன் இலவச உணவு தானியங்களை   இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும்  உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் எடுத்து சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 45 ரேக்குகள் எனும் அளவில், 2 ஆயிரத்து 353 உணவு தானிய ரேக்குகள் 2021 மே 1 ஆம் தேதி முதல் இந்திய உணவு கழகத்தால் அனுப்பப்பட்டுள்ளன. 

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கொரோனா பெருந்தொற்றின் போது இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 21 வரை, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 72 ஆயிரம் டன் இலவச உணவு தானியங்களை  36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது

இந்திய உணவு கழகத்தின் மத்திய தொகுப்பில் 593 லட்சம் டன் கோதுமையும் 294 லட்சம் டன் அரிசியும்  தற்போது இருப்பில் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்