"மக்களின் நம்பிக்கை கீற்று-யோகா" - பிரதமர் மோடி பெருமிதம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு தன்னம்பிக்கை தர யோகா உதவுவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
x
 சர்வதேச யோகா தின உரையில் நோய் நாடி எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டியும் அவர் பேசினார்.இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், யோகாவின் தேவை பெருமளவு அதிகரித்து இருப்பதாக மோடி கூறினார். அனைத்து நாட்டினரும் ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று கூறிய அவர்,...
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகா மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது என்றார். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மக்களுக்கு நம்பிக்கை கீற்றாக யோகா தெரிவதாகவும்,,...எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி படைப்பாற்றலுக்கான வழியை யோகா காட்டுவதாகவும் மோடி கூறினார்.
மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை வழங்கி, மன ஆரோக்கியத்தை யோகா ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி...,நோயின் காரணங்களை ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். கொரோனா காலத்தில் மருத்துவர்கள் யோகாவின் மூலமாக தங்களையும் வலிமைப்படுத்திக் கொண்டார்கள் என்றும்,....லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகாவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர் என்றும் மோடி தெரிவித்தார். உலகெங்கும் பல விஞ்ஞானிகள் யோகா குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் மோடி தனது உரையில் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்