2022-க்குள் 36 ரபேல் போர் விமானங்கள் : இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் - இந்திய விமானப் படைத் தளபதி உறுதி

திட்டமிட்டபடி 36 ரபேல் போர் விமானங்களும் 2022க்குள் இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என்று இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதூரியா கூறியுள்ளார்.
2022-க்குள் 36 ரபேல் போர் விமானங்கள் : இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் - இந்திய விமானப் படைத் தளபதி உறுதி
x
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசால்ட் ஏவியேஷன் என்ற புகழ் பெற்ற விமானத் தயாரிப்பு நிறுவனம், ரபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படைக்காக, 59,000 கோடி ரூபாய்க்கு 36 ரபேல்  போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் அரசுடன் இந்திய அரசு 2016இல் ஒப்பந்தம் செய்தது. இதுவரை 23 ரபேல்  போர் விமானங்கள் பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளன. 2022க்குள் மீதியுள்ள 13 ரபேல் போர் விமானங்களுகும் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டு, இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என்று இந்திய விமானப்படையின் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதூரியா கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சில விமானங்கள் இந்தியா வந்து சேர தாமதமானாலும், பல விமானங்கள் திட்டமிட்ட தேதிகளுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு, இந்திய விமானப் படையில் சேர்க்ப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்