பாதிப்புக்கு ஏற்ப 4 வகை ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பை பொறுத்து, 4 வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா பாதிப்பை பொறுத்து, 4 வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மதுபான கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் எனவும், பார்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக மொபைல் அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று கூறினார். சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், ஊரடங்கு தளர்வில் சுற்றுலாத்தலங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதியில்லை என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்