130 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் - சிறுவனை மீட்க 8 மணி நேர போராட்டம்
பதிவு : ஜூன் 15, 2021, 06:03 PM
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மீட்டுள்ளார்.
தரியாபூர் என்ற பகுதியில் வீட்டின் முன், விளையாடி கொண்டிருந்த, சிவா எனும், மூன்றரை வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக தவறி 95 அடி ஆழமுள்ள  ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதை அறிந்த பெற்றோர், காவல்  நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் உடனடியாக விரைந்த ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் ஐ.பி.எஸ்  தலைமையிலான 30 பேர் கொண்ட குழு, சிறுவனை மீட்க முயற்சித்தனர்.  
சிறுவன் விழுந்த சில மணி நேரத்தில் அவனது புகைப்படம், சேவ் சிவா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பின்னர் 130 அடி ஆழ கிணற்றில், 90 அடியில் சிக்கி கொண்ட சிறுவனை, மீட்புக்குழுவினர், 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். சிறுவனை உயிருடன் மீட்ட குழுவினருக்கு, ஊர்மக்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீட்கப்பட்ட சிறுவனுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

கேரளாவில் 22,414 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.71 லட்சம்

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

7 views

விமான நிலைய பொருளாதார திருத்த மசோதா - மசோதாவுக்கு வரவேற்பு அளித்துள்ள அதிமுக

விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்று அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

13 views

டெல்டாவில் தொடரும் ஹைட்ரோ கார்பன் பணி - மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தகவல்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓஎன்ஜிசி நிறுவனம் 6 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

8 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

13 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

8 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.