லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவை - கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றம்

லட்சத்தீவுக்கான சரக்கு போக்குவரத்து, கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவை - கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றம்
x
லட்சத்தீவில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகியான பிரஃபுல் படேல், கொண்டு வந்த சீர்திருத்தங்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், பிரஃபுல் படேல் திங்கள் கிழமை அன்று லட்சத்தீவு செல்ல இருப்பதாகவும், 20ம் தேதி வரை அங்கு தங்கி சீர்திருத்த நடவடிக்கைகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, லட்சத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, லட்சத்தீவிற்கு கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகத்தில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு, சரக்கு போக்குவரத்து முழுவதுமாக கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு தேவையான சரக்குகளை பேப்பூர் வழியாக கொண்டு செல்லவும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், கேரள அரசு தயாராக இருப்பதாக, அம்மாநில துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், மங்களூருவுக்கு சரக்கு போக்குவரத்து மாற்றப்பட்ட நடவடிக்கை, கேரளாவுடனான லட்சத்தீவின் உறவுகளை துண்டிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்