பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கு - டொமினிகாவில் சோக்‌ஷி கைது

பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்‌ஷிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கு - டொமினிகாவில் சோக்‌ஷி கைது
x
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்‌ஷிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்து உள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட வைரவியாபாரியான மெகுல் சோக்‌ஷி, கடந்த 2018-ம் ஆண்டு ஆண்டிகுவாவிற்கு தப்பிச் சென்றார். அங்கு வசித்து வந்த அவர், சமீபத்தில் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில், டொமினிகாவில் மீட்கப்பட்டு, சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சோக்‌ஷிக்கு ஜாமின் அளிக்குமாறு டொமினிகாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், அவரது சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, சோக்‌ஷி தரப்பு டொமினிகா உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி இருந்தது. இந்நிலையில், மெகுல் சோக்‌ஷிக்கு ஜாமின் அளிக்க முடியாது என டொமினிகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அவர் தப்பிச் சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், ஜாமின் மறுக்கப்பட்டதாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்