விரைவில் அமைச்சரவை அமைக்கப்படும்" - பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கருத்து

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், அமைச்சரவை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
விரைவில் அமைச்சரவை அமைக்கப்படும் - பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கருத்து
x
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், அமைச்சரவை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், நேற்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டதாக தெரிவித்தார். இனி முதலமைச்சர் ரங்கசாமி உரிய முடிவை அறிவிப்பார் எனவும், அடுத்த வாரம் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக சாமிநாதன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்