கொரோனா தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை... ஒரே நாளில் 30.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை 24 கோடியே 58 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை... ஒரே நாளில் 30.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
கொரோனா தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை... ஒரே நாளில் 30.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை 24 கோடியே 58 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் 146-வது நாளில், 30 லட்சத்து 32 ஆயிரத்து 675 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 27 லட்சத்து 33 ஆயிரத்து 87 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2 லட்சத்து 29 ஆயிரத்து 588 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 24 கோடியே 58 லட்சத்து 47 ஆயிரத்து 212 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,தமிழ்நாட்டில் இதுவரை 20 லட்சத்து 7 ஆயிரத்து 665 பேர் தடுப்பூசியின் முதல் தவணையையும், 5 ஆயிரத்து 265 பேர் இரண்டாம் தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரியில் இதுவரை 50 ஆயிரத்து 340 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்