மீன்பிடித் துறைமுகங்களால் பாதிக்கப்படும் கடலோர கிராமங்கள் - கேரள ஆய்வு முடிவில் தகவல்

மீன்பிடித் துறைமுகங்களால், கேரளாவின் தெற்கு கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுவதாக கேரள அறிஞர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மீன்பிடித் துறைமுகங்களால் பாதிக்கப்படும் கடலோர கிராமங்கள் - கேரள ஆய்வு முடிவில் தகவல்
x
மீன்பிடித் துறைமுகங்களால் பாதிக்கப்படும் கடலோர கிராமங்கள் - கேரள ஆய்வு முடிவில் தகவல் 

மீன்பிடித் துறைமுகங்களால், கேரளாவின் தெற்கு கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுவதாக கேரள அறிஞர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆய்வின் முடிவில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வர்த்தகத் துறைமுகம், கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல், தேங்காப்பட்டணம் பகுதிகளில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்கள், ஆகியவை, கேரளாவின் தெற்கு கடலோர கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் நிலையில், சங்குமுகம், வலியதுறை பகுதிகளும், மற்றும், பொழியூர், அஞ்சு தெங்கு, பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பும், துறைமுகங்களின் வருகையால் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இப்பகுதிகளில் திட்டமிடுதல் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குமரியில், புதிதாக அமைக்கப்பட்ட முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகங்களுக்காக அப்பகுதிகளில் சிறிது தூரம் கடல் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாகவே, மேற்கு கடலோர கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவ மக்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Next Story

மேலும் செய்திகள்