கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருந்து - மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் தயாரிப்பு

2-DG மருந்து தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க, மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருந்து - மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் தயாரிப்பு
x
மிதமான மற்றும் தீவிரமான கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக 2 டிஜி என்கிற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் வர்த்தக ரீதியில் தயாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த மருந்தை இந்தியாவில் உள்ள மேலும் பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க ஏதுவாக தொழில்நுட்ப பரிமாற்றத்தை வழங்க, ராணுவ ஆராய்ச்சிக் கழகம் முன்வந்துள்ளது.
இதில் விருப்பமுள்ள இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், வரும் 17-ஆம் தேதிக்கு முன்பாக விருப்ப விண்ணப்பிக்கலாம் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்