கோவிஷீல்டு 2-வது டோஸ் கால அளவு - வெளிநாடு செல்பவர்களுக்கு மாற்றியமைப்பு

வெளிநாடு செல்பவர்கள் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால அளவை மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றியமைத்து உள்ளது.
x
வெளிநாடு செல்பவர்கள் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால அளவை மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றியமைத்து உள்ளது. 

முதல் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், 84 நாட்கள் கழித்து 2-வது டோசை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.  

இந்நிலையில், வெளிநாடு செல்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட 84 நாட்களுக்கு முன்னதாகவே 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது,

இதன்படி, கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்பவர்களும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக வெளிநாடு செல்பவர்களும் முன்னதாகவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், 

இருப்பினும், முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்கள் கழித்தே, 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி, வெளிநாடு செல்பவர்கள் 2-வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும்,....

இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் கொரோனா சான்றிதழில் பாஸ்போர்ட் எண் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாடு பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு இந்த வசதி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்