15 நாள் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் - 3 மாதம் ஆகியும் கைது செய்யப்படாத இளைஞர்
கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய இளைஞரை 3 மாதங்கள் ஆகியும் போலீசார் கைது செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய இளைஞரை 3 மாதங்கள் ஆகியும் போலீசார் கைது செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மார்ட்டின் ஜோசப் என்ற இளைஞர் நட்பாக பழகிய ஒரு இளம் பெண்ணுடன் கொச்சியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். மார்ட்டின் ஜோசப்பின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த நிலையில், மார்ட்டின் ஜோசப் அந்த பெண்ணை ஒரு அறையில் 15 நாட்களாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண்ணை தாக்கியும், சூடு வைத்தும் சித்திரவதை செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சித்ரவதைகளை பொறுக்க முடியாத அந்த இளம்பெண் வீட்டிலிருந்து தப்பி சென்று
எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்திவு
செய்து 3 மாதங்கள் ஆகியும் மார்ட்டின் ஜோசப் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன் ஜாமீன் கேட்டு கேரளா உயர்நீதிமன்றத்தில் மார்ட்டின் ஜோசப் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story

