"உலகின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடம்" - பிரதமர் மோடி பெருமிதம்
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு சமுதாய கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு சமுதாய கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
எப்போது எல்லாம் மனித குலத்திற்கு சிக்கல் ஏற்படுகிறதோ, அப்போது எல்லாம் சிறப்பான எதிர்காலத்திற்கான வழியை அறிவியல் உருவாக்கி உள்ளதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
முன்பு உலகில் ஏதேனும் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டால், அதற்காக இந்தியா, பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் தான் இருந்தது என்றும், தற்போது இந்திய விஞ்ஞானிகளும் அதே வேகத்தில் பணியாற்றி மற்ற நாடுகளின் விஞ்ஞானிகளோடு தோளை உயர்த்தி பெருமையுடன் நடப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
மென்பொருள் முதல் செயற்கைக் கோள் வரை உலக நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா இன்று மிகப்பெரிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
Next Story