கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள நிதி - கேரளா பட்ஜெட்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள, 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள நிதி - கேரளா பட்ஜெட்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
x
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள, 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா அரசின் முதல் திருத்தப்பட்ட பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், கொரோனா 2-ம் அலை தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பட்ஜெட்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும்,
கடந்த ஆண்டில் கேரளா அரசு கொரோனாவுக்காக செலவிட்ட தொகை இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம்  சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்கள் கொண்டுவரமுடியும் என கூறியுள்ளார்.
அதோடு, கேரளாவின் சுகாதாரத் துறையை வலுப்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் சிறந்த முறையில் பராமரிக்க முடியும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்