உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில், புதன் கிழமை நடந்த விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வந்த மத்திய அரசு, தற்போது உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி விவகாரத்தில் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் யாரும் பொறுப்பேற்க மாட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், மக்களுக்கோ, மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்துக்கோ பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற மோடி அரசின் நம்பிக்கையின் மற்றுமொரு உதாரணம்தான் இது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்