ரூ.35,000 கோடிக்கான செலவு விவரம்? - அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்

இதுவரை வாங்கியுள்ள அனைத்து தடுப்பூசிகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.35,000 கோடிக்கான செலவு விவரம்? - அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்
x
இதுவரை வாங்கியுள்ள அனைத்து தடுப்பூசிகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் விநியோகம், சேவைகள் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில். நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
இதுவரை மத்திய அரசு வாங்கியுள்ள அனைத்து தடுப்பூசிகளின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
எஞ்சியுள்ள மக்களுக்கு எப்போது, எப்படி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற திட்டத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 
 
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளை இருப்பில் வைப்பது அல்லது கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை குறித்து விரிவாக அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 
18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு ஏன் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கக் கூடாது ? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தடுப்பூசிகளுக்கா பட்ஜெட்டில் ஒதுக்கிய 35,000 கோடி ரூபாய் இதுவரை எந்தெந்த வகைகளில் எல்லாம் செலவு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,
 
தடுப்பூசி விவகாரத்தில்  மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன ? தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கொள்கை முடிவு எடுத்திருந்தால், அந்த கொள்கை முடிவு தொடர்பான ஆவணத்தை மாநில அரசுகள் 2 வாரத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்போது தான் தடுப்பூசி தங்களுக்கு இலவசமாக கிடைக்கும் என, மக்களுக்கு உறுதிபட நம்பிக்கை ஏற்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்