கொரோனா தடுப்பூசி 21.83 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
நாடு முழுவதும் இதுவரை 21 கோடியே 83 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 21 கோடியே 83 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரு கோடியே 67 லட்சம் தடுப்பூசிகளும், முன்களப் பணியாளர்களுக்கு 2 கோடியே 42 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 15 கோடியே 48 லட்சம் தடுப்பூசிகளும், 18 முதல் 44 வயது பிரிவினருக்கு 2 கோடியே 13 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 18 முதல் 44 வயதுடைய 13 லட்சத்து 89 ஆயிரத்து 409 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
அதேவயது பிரிவினரில் 563 பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story

