"கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு தீர்வு" - கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு தீர்வு - கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
x
நாடு முழுவதும் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதேசமயம், இதற்கான கொரோனா தடுப்பூசிகளை, மாநில அரசுகளே அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பிரச்சனையை தீர்க்க, மாநிலங்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார். பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்