நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி - திருமண போட்டோஷூட்டில் பரிதாபம்
பதிவு : மே 31, 2021, 01:58 PM
ஆந்திராவில் திருமண போட்டோஷூட் எடுக்க சென்ற போது 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் திருமண போட்டோஷூட் எடுக்க சென்ற போது 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கும்பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மலைப்பகுதியில் உள்ள அருவியில் நின்றபடி போட்டோஷூட் எடுக்க விரும்பவே, அதற்காக நண்பர்கள் நிரஞ்சன் மற்றும் குமார் ஆகியோருடன் சென்றுள்ளார். பாறையின் நடுவே இறங்கி தண்ணீருக்குள் இருந்தவாறு போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது 2 பேர் திடீரென வழுக்கி விழவே, காப்பாற்ற முயன்ற மற்றொருவரும் நீரில் மூழ்கினார். பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்ட 3 பேரும் வெளியேற முடியாமல் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே தகவல் சொல்லவே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் சடலங்களானது பாறையின் நடுவே மாட்டிக் கொண்டிருப்பதால் அதனை மீட்கும் முயற்சியானது நடைபெற்று வருகிறது. சில நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் உட்பட 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

110 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

29 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

21 views

"ஹாரியின் பாசத்தை பார்த்து ’தி பென்ச்’ எழுதினேன்" - மேகன் மெர்கல் நெகிழ்ச்சி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

11 views

பிற செய்திகள்

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

32 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

6 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

493 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

13 views

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை

லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.