நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் - முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கிவைப்பு

கேரளாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கான புத்தக விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் - முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கிவைப்பு
x
கேரளாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற  உள்ள நிலையில், மாணவர்களுக்கான புத்தக விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கேரளாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டது. தற்போது, கொரோனா  இரண்டாம் அலை காரணமாக, முழு ஊரடங்கு அமலில் இருப்பது மட்டுமல்லாமல்
நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டின் தொடக்க வகுப்பு, அனைத்து பள்ளிகளிலும் நாளை நடைபெற உள்ளது. திருவனந்தபுரம் காட்டன் ஹில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார். இதனிடையே, அனைத்து பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தக விநியோகம், மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்