கேரள காங். தலைவர் பெயரில் மோசடி; வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிய நண்பர்கள்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கேரள காங். தலைவர் பெயரில் மோசடி; வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிய நண்பர்கள்
x
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்று கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கணக்கில் தனக்கு நிதியுதவி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது தான் பரபரப்புக்கு காரணம் . இதையடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கில் ஏராளமானோர் பணம் அனுப்பியதோடு, பலர் அவரை  தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். நிதியுதவி அளிக்குமாறு தான் பேஸ்புக்கில் எதுவும் குறிப்பிடவில்லை என அவர் பதில் அளித்துள்ளார்.  அப்போதுதான் அது போலியான பேஸ்புக் கணக்கு என்பது தெரியவந்துள்ளது. மேலும், தலசேரி பகுதியை சேர்ந்த நவுஷாத் தனது பேஸ்புக் பக்கத்தில், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரது ஆயுளுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபிக்கு முல்லப்பள்ளி ராமச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்