கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு மருந்து : 2-டிஜி மருந்து செயல்படுவது எப்படி...?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 2-டிஜி மருந்து செயல்படுவது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்...
கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு மருந்து : 2-டிஜி மருந்து செயல்படுவது எப்படி...?
x
இந்தியா கொரோனா 2-வது அலையில் சிக்கி தவிக்கும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 2-டிஜி என அழைக்கப்படும்  2-டியோக்ஸி டி-குளுகோஸ் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கும் வகையில் பொடி வடிவில் 2-டிஜி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில் இருக்கும் மூலக்கூறுகள் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படவும் கடந்த ஆண்டு பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது. 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில், ஆக்சிஜனை நம்பியிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலனை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை முடிவுகளின்படி இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் 2-டிஜி மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதியை வழங்கியுள்ளது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து டிஆர்டிஓ உருவாக்கியிருக்கும் 2-டிஜி மருந்து, குளுக்கோஸ் வடிவில் இருக்கிறது. பொதுவாக மனித உடலில் வைரஸ் பல்கிப்பெருகுவதற்கு குளுக்கோஸ் அவசியமாகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனித உடலுக்குள் 2-டிஜி மருந்து செல்லும் போது அதனை குளுக்கோஸ் என எடுக்கும் வைரசை, மருந்தில் இருக்கும் மூலக்கூறுகள் முடக்குகின்றன. இதனையடுத்து வைரஸ் பல்கிப்பெருவதை  2-டிஜி மருந்து முற்றிலும் தடுத்து விடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் வைரஸ் வேகமாக பரவும் போதுதான் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கிறது. இம்மருந்து மூலம் கொரோனா வைரஸ் முடக்கப்படும் போது, ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய சூழல் குறைகிறது  என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த மருந்தை, கொரோனா நோயாளிகள் நாளொன்றுக்கு 2 முறை எடுக்க வேண்டும் என்றும், முழுமையாக குணமடைய மருந்தை தொடந்து 5 முதல் 7 நாட்களுக்கு எடுக்க வேண்டும் என்றும் டிஆர்டிஓ-வின் திட்ட இயக்குநரும் விஞ்ஞானியுமான டாக்டர் சுதிர் சந்தனா கூறியுள்ளார். இந்த மருந்தை டிஆர்டிஓ விஞ்ஞானி டாக்டர் அனந்த் நாராயண் பாட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இம்மருந்து வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்