புதையலுக்காக சுரங்கம் தோண்டிய சம்பவம் - ஒரு ஆண்டில் 80 அடி ஆழ சுரங்கம் அமைப்பு

திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதாக கூறி 80 அடியில் சுரங்கம் அமைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதையலுக்காக சுரங்கம் தோண்டிய சம்பவம் - ஒரு ஆண்டில் 80 அடி ஆழ சுரங்கம் அமைப்பு
x
திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதாக கூறி 80 அடியில் சுரங்கம் அமைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர், நாயுடு. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதிக்கு குடிபெயர்ந்த இவர், தனக்கு தெரிந்த சாமியார் ஒருவருடன் சேர்ந்து புதையல் குறித்து ஆராய்ந்துள்ளார். அந்த சாமியார், சேஷாசலம் மலையில் குறிப்பிட்ட பகுதியில் 120 அடி ஆழத்தில் புதையல் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, ஆறு கூலியாட்களின் உதவியோடு கடந்த ஒரு ஆண்டாக 80 அடி ஆழத்திற்கு நாயுடு சுரங்கம் தோண்டி வந்துள்ளனர். இந்நிலையில், மங்கலம் பகுதியில் இருந்து சேஷாசல மலைக்கு சுரங்கம் தோண்ட செல்வதற்காக காத்திருந்த மூன்று பேரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்துள்ளனர். இதில், புதையலுக்காக சுரங்கம் தோண்டி வருவது தெரிய வந்தது. மலைப்பகுதிக்கு சென்று பார்த்த போது, 80 அடி ஆழ சுரங்கத்தை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்