மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை - காணொலி காட்சி வழியாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துதவது தொடர்பாக, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை - காணொலி காட்சி வழியாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை
x
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வரும் கல்வியாண்டு முதல் நாடு தழுவிய அளவில் அமல்படுத்த முயற்சித்து வருகிறது. இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், இன்று காலை 11 மணியளவில் அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் பள்ளி கல்வித்துறை செயலாளர் அபூர்வா, தமிழக அரசின் ஆட்சேபனை குறித்து மத்திய அரசிடம் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்