புயலால் பாதிக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் : பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புயலால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புயலால்  பாதிக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் : பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
டவ்தே புயல் நாளை குஜராத் கடற்கரையை அடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.  சம்மந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள்  காணொலி காட்சி வாயிலாக இதில் பங்கேற்றனர். பேரிடரை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக முப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், 
மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் எந்தவிதமான இடையூறும் இன்றி செயல்பட தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புயலால் பாதிக்கப் படும் இடங்களில் உள்ள மக்களை,  பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சரவைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்