கனரா வங்கியில் காசாளர் ரூ.8.13 கோடி மோசடி - லுக் அவுட் நோட்டீஸ்

கேரளாவில் கனரா வங்கியில் காசாளராக இருந்தவர் 8 கோடியே 13 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
x
கேரளாவில் கனரா வங்கியில் காசாளராக இருந்தவர் 8 கோடியே 13 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள கனரா வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கு திடீரென ரத்து செய்யப்பட்டது. 10 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்த வங்கி கணக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது வங்கியில் காசாளராக பணியாற்றிய விஜீஷ் வர்கீஸ் என்பவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்படி கடந்த 14 மாதங்களில் இதுபோல் 8 கோடியே 13 லட்சம் ரூபாய் அவர் மோசடி செய்ததும் தெரியவந்தது. விஜீஷ் வர்கீஸ் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் தலைமறைவான நிலையில் அவரை தேடும் வகையில் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் விஜீஷ் பெரும்பாலான பணத்தை பயன்படுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவி சூர்யா தாரா வர்கீஸின் வங்கி  கணக்கில் மட்டும் 39  முறை பணத்தை செலுத்தியதும் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்