தடுப்பூசிக்கான கால அவகாசம் விஞ்ஞான பூர்வ ஆய்விற்கு பின் உயர்த்தப்பட்டது - சுகாதார அமைச்சகம்

விஞ்ஞானபூர்வ ஆய்வுகளுக்குப் பிறகே கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வதற்கான கால அவகாசம் உயர்த்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய சுகாதாரத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், 
மத்திய, மாநில அரசுகள் எடுத்த கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், கடந்த வாரம் 21 புள்ளி 9 சதவீதமாக இருந்த தேசிய சராசரி நோய் தொற்று விகிதம், தற்போது 19 புள்ளி 8 சதவீதமாக உள்ளதாக தெரிவித்தார். டெல்லி, சட்டீஸ்கர்,  ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெருமளவில் நோய் தொற்று குறைந்து இருப்பதாகவும், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோய் தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட நகரங்களில் நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அங்கு தீவிர நோய் கட்டுப்பாடு மற்றும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.மியூகர் மைகொசிஸ் போன்ற கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், இந்த நோய் முகம், மூக்கு, கண்கள், மூளை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி பார்வையையே செயலிழக்க வைக்கும் என எச்சரிக்கை விடுத்த ரந்தீப் குளேரியா, ஸ்டீராய்டு மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதே இத்தகைய தொற்றுக்கு காரணம் என தெரிவித்தார்.விஞ்ஞானபூர்வ ஆய்வுகளுக்குப் பிறகே கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வதற்கான கால அவகாசம் உயர்த்தப் பட்டதாக தெரிவித்த நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால், விஞ்ஞானிகளின் முடிவுக்கு மரியாதை அளியுங்கள் எனவும் அவர்களை தூற்ற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது கோவேக்ஸின் தடுப்பூசியை மாதத்திற்கு 1 புள்ளி 5 கோடி என்கிற அளவில் தயாரித்து வருவதாகவும், அதனை 10 கோடி அளவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் வி.கே.பால் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்