நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை - முல்லை பெரியாறு அணை நீர்வரத்து அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,388 கன அடியாக அதிகரித்துள்ளது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்  கனமழை - முல்லை பெரியாறு அணை நீர்வரத்து அதிகரிப்பு
x
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு  1,388 கன அடியாக அதிகரித்துள்ளது

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தவ்-தே புயல்  காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 128.80 அடியாக உயர்ந்துள்ளது.  இன்று காலை 1388 கனஅடியாக  நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அணையிர் நீர்  இருப்பு 4,439 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து  தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  இதனிடையே,    வைகை அணையின் நீர்மட்டம் 62.60 அடியாக  உள்ளது. நீர்வரத்து 85 கனஅடியாக அதிகரித்து உள்ள நிலையில், நீர் இருப்பு 4,118 மில்லியன் கன அடியாக  அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்