கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதே தீர்வு; பிரியங்கா காந்தி யோசனை

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் வரை காலதாமதம் செய்து, இந்தியாவுக்கான முதல் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை போட்டது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

x

இதுதொடர்பான பதிவில், உலகளவில் அதிகமாக தடுப்பூசிகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்றும், ஏப்ரல் 12 -ல்  தடுப்பூசி திருவிழா கொண்டாடிய பா.ஜ.க. அரசு, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உரிய தடுப்பூசிகளை வழங்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.  இந்திய தடுப்பூசி  நிறுவனங்களிடம் , தடுப்பூசியை வாங்குவதற்காக வெகுகாலத்துக்கு முன்னரே அமெரிக்கா போன்ற நாடுகள் ஒப்பந்தம் போட்டுள்ளன, இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?  எனவும் பிரியங்கா காந்தி  கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்