கேரளாவில் இன்று முதல் 16 வரை முழு ஊரடங்கு - மம்மூட்டி குரலில் விழிப்புணர்வு வீடியோ

கேரளாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 38,460 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
கேரளாவில் இன்று முதல் 16 வரை முழு   ஊரடங்கு - மம்மூட்டி குரலில் விழிப்புணர்வு வீடியோ
x
கேரளாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 38,460 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவலின் தீவிரம் தொடர்பாக அம்மாநில பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் மம்மூட்டி தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வுக்கு குரல் கொடுத்து வரும் நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடர்பான அரசின் விழிப்புணர்வு வீடியோ மம்மூட்டியின் குரலில் வெளியாகியுள்ளது. இதில் கொரோனாவை முழு ஊரடங்கு மூலம் மட்டுமே  அழிக்க முடியும் என்றும், ஒவ்வொரு அறிவுறுத்தலும் ஓய்வில்லாமல் போராடும் வீரர்களுக்காகவும்,  நமக்காகவும் கீழ்ப்படியலாம் என்பது போல இடம் பெற்றுள்ளது. சிறிய தவறுகள் எதிரிக்கு பெரிய வாய்ப்புகளைத் தரும் என்றும்,  இந்த போரில் பொறுமை மிகப்பெரிய ஆயுதம்  என  அதில் மம்மூட்டி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்