முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பது நீடித்தால் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x


vovt

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து துணைநிலை ஆளுநர் தலைமையில் கொரோனா மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால், முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும்,  மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணிச்சுமையை குறைக்க கூடுதலாக பணியாளர்களை நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்