"கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது" - முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது - முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை
x
கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கொரோனா மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்று கூற முடியாது எனவும், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்