கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள் - சந்தித்த சவால்கள்
பதிவு : மே 03, 2021, 12:47 PM
கேரளாவில் ஆட்சியை தக்கவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள், சந்தித்த சவால்களை பார்க்கலாம்...
இந்தியாவிலேயே படிப்பறிவு அதிக உள்ள மாநிலமான கேரளாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் பிரதான கட்சிகளான மார்க்சிஸ்ட், இடதுசாரி, மதச்சர்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாணி தலைமையிலான கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மூன்றாவது அணியாக களத்தில் இருந்தது. இதில் 91 இடங்களில் வெற்றி பெற்ற இடது ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட் 58 இடங்களை பிடித்ததன் மூலம் பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.தனது ஆட்சி காலத்தில் எளிமையான, அதேநேரம் துடிப்பான நிா்வாகத்தால் பெயர் எடுத்த பினராயி விஜயனுக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், அதனை செயல்படுத்த அரசு பெரும் முயற்சி மேற்கொண்டது. இது பினராயி அரசுக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியது. அதேநேரம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்பதை அரசியல் அஸ்திரமாக பாஜக பயன்படுத்திக் கொண்டது. மாநிலம் முழுவதும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. ஆனால், இது பாஜகவுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதால், அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதிலிருந்து உஷாரான பினராயி அரசு, சபரிமலை விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தது. கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் மீது பினராயி அரசு துணிந்து நடவடிக்கை எடுத்தது. நடிகர் திலீப்பை கைது செய்ததுடன், வழக்கு  விசாரணையும் துரிதப்படுத்தியது. இது பினராயி ஆட்சி மீது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுத்தந்தது. இந்நிலையில் ஆட்சியின் கடைசி கட்டத்தில் தங்க கடத்தல் வழக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், ஆட்சி மீது களங்கம் கற்பிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டதால், இது பினராயி அரசுக்கு ஆதரவான போக்கையே ஏற்படுத்தியது. தேசிய அளவில் பிரதான கட்சிகளாக விளங்கும் பாஜக மற்றும் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை தொடர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வியூகங்களை வகுத்து செயல்பட்டது. தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1882 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

67 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

46 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுக்க உத்தரவு - அஸ்ஸாம் அரசு

அசாமில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வழக்கமான நேரத்தில் இயங்கலாம் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

3 views

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

27 views

காதலிக்க மறுத்த பெண் கொடூர கொலை... கழுத்தறுத்து கொலை செய்த இளைஞன்

ஆந்திராவில் காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞரை, கிராம மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

17 views

விமான படை வீரர்கள் பயிற்சி நிறைவு...ஹெலிகாப்டர், விமானங்களில் பறந்து சாகசம்

தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் (Dundigal) அகாடமியில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது

17 views

நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

கனமழை காரணமாக நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

ஸ்விஸ் வங்கி முதலீடு அதிகரிப்பு விவகாரம் - ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.