ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்தன

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்து உள்ளன.
x
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை, அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கான பரிசோதனைகளை ரெட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் முடித்து இருந்த நிலையில், முதற்கட்டமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் ஐதராபாத் வந்துள்ளன. தனி விமானம்மூலம் தடுப்பூசிகள் வந்த நிலையில், இந்த மாதத்தில் இருந்து ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்