18 - 44 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ஆம் தேதி தொடங்கப் போவதில்லை - மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மே1ம் தேதி தடுப்பூசி போடப் போவதில்லை என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 - 44 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ஆம் தேதி தொடங்கப் போவதில்லை - மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு
x

மகாராஷ்டிராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மே1ம் தேதி தடுப்பூசி போடப் போவதில்லை என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் மே 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தத் திட்டத்தை மே 1ம் தேதி தொடங்கப் போவதில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் டோப் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 5 கோடியே 71 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 

தேவையான தடுப்பூசி இருப்பு கிடைத்தவுடன் திட்டம் தொடங்கும் எனவும் ராஜேஸ் டோப் தெரிவித்தார். 

மேலும், தடுப்பூசி கொள்முதலுக்காக 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்த அவர், 

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்திற்கு தனியாக ஒரு குழு அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்