500 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்

நாடு முழுவதும் 500 இடங்களில் கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
500 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்
x
நாடு முழுவதும் 500 இடங்களில் கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில், PM CARE நிதியில் இருந்து ஒரு லட்சம் Portable Oxygen Concentrators வாங்க ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எளிதில் கொண்டு செல்லும் இந்த ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை விரைவாக வாங்கி கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் மேலும் 500 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்கவும் பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதன் மூலம், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகள் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு தேவையான ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்கும்.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் DRDO சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான இந்தியத் தொழில் நுட்பத்தின் மூலம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்