ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி - பிரேசில் சுகாதார அமைப்பு நிராகரிப்பு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு மறுப்பு தெரிவித்து உள்ளது
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி - பிரேசில் சுகாதார அமைப்பு நிராகரிப்பு
x
பிரேசிலில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள மாகாண ஆளுநர்கள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கொள்முதல் செய்ய அந்நாட்டு சுகாதார அமைப்பிடம் அனுமதி கோரி இருந்தனர். இந்நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து போதிய தகவல்கள் இல்லை என்றும் கூறி பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு கோரிக்கையை நிராகரித்து உள்ளது. இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்