நட்சத்திர விடுதியில் 100 கொரோனா படுக்கைகள் - டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் 100 கொரோனா படுக்கைகள் உருவாக்கும் உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.
நட்சத்திர விடுதியில் 100 கொரோனா படுக்கைகள் - டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
x
கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில்  100 கொரோனா படுகைகளை உருவாக்க, டெல்லி அரசு முடிவு செய்து.இதில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள்  அவர்களது குடும்பத்தார்களுக்கு, தொற்று உறுதியானால், சிகிச்சை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய வசதிகளை செய்து தர சொல்லி உத்தரவிட்டது யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாரும் இத்தகைய வசதிகளை கேட்கவில்லை எனவும் நீதிபதிகள் என விளக்கம் அளித்தனர். இதையடுத்து 
இந்த உத்தரவை ரத்து செய்வதாக, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்