கொரோனா தடுப்பூசி விநியோக திட்டம் - தடுப்பூசி நிறுவனங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பதிவு : ஏப்ரல் 28, 2021, 08:02 AM
கொரோனா தடுப்பூசி விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து விளக்கமளிக்க, தடுப்பூசி நிறுவனங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிரமோத் என்பவர், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஒரே விதமான கொரோனா தடுப்பு மருந்துக்கு வெவ்வேறு விதமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்த மனுதாரர், மத்திய அரசுக்கு வழங்கும் விலையிலேயே மாநில அரசுகளுக்கு தடுப்பூசி வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது மட்டுமின்றி, தடுப்பூசிகளின் விலை நிர்ணயத்திற்கான உரிமையை, அந்தந்த நிறுவனங்களுக்கே வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தார். மனுவை பரிசிலீத்த நீதிபதிகள், கொரோனா தடுப்பூசி விநியோகத் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக கூறி, பல்வேறு கேள்விகளுடன் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், மத்திய அரசும் இதுதொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே விவகாரம் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்கவில்லை எனக் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1882 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

67 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

46 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுக்க உத்தரவு - அஸ்ஸாம் அரசு

அசாமில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வழக்கமான நேரத்தில் இயங்கலாம் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

3 views

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

27 views

காதலிக்க மறுத்த பெண் கொடூர கொலை... கழுத்தறுத்து கொலை செய்த இளைஞன்

ஆந்திராவில் காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞரை, கிராம மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

17 views

விமான படை வீரர்கள் பயிற்சி நிறைவு...ஹெலிகாப்டர், விமானங்களில் பறந்து சாகசம்

தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் (Dundigal) அகாடமியில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது

17 views

நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

கனமழை காரணமாக நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

ஸ்விஸ் வங்கி முதலீடு அதிகரிப்பு விவகாரம் - ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.