சோலார் மின் தகடு மோசடி வழக்கு : சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை - கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பு

சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சோலார் மின் தகடு மோசடி வழக்கு : சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை - கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பு
x
சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் மஜீத் என்பவரிடம் சரிதா நாயரும். பிஜு ராதாகிருஷ்ணன் என்பவரும் சேர்ந்து சோலார் மின் தகடு அமைத்து தருவதாக கூறி 42 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அப்துல் மஜீத் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோழிக்கோடு குற்றவியல் முதல்வகுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சரிதா நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்ப அளித்துள்ளார். மற்றொரு குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் தொற்றை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அவருக்கான தீர்ப்பு பின்னர் அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். மூன்றாவது பிரதியான மணி மோன், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்