உச்சநீதிமன்றத்திற்கு முன்கூட்டியே கோடை விடுமுறை

உச்சநீதிமன்றத்திற்கு மே 7ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை கோடை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்திற்கு முன்கூட்டியே கோடை விடுமுறை
x

உச்சநீதிமன்றத்திற்கு மே 7ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை கோடை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, டெல்லியில் ஊரடங்கு நீட்டிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்குமாறு தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியிருந்தன. இதையடுத்து வழக்கறிஞர்கள் சங்கம், பார் கவுன்சில் மற்றும் வழக்கு  தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளுடன் தலைமை நீதிபதி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் உச்சநீதிமன்றத்திற்கு மே 7ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் உச்சநீதிமன்ற இணைப்பு கட்டடத்தில் 60 படுக்கை வசதிகள் கூடிய பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்தை அமைக்க தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்