ஆக்சிஜன் உற்பத்தி- மத்திய அரசு உத்தரவு

நாட்டில் மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி- மத்திய அரசு உத்தரவு
x
நாட்டில் மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் , மருத்துவம் அல்லாத நோக்கங்களுக்காக திரவ ஆக்சிஜனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே திரவ ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அனைத்து உற்பத்தி  நிலையங்களும்  அவற்றின் திரவ ஆக்சிஜனின் உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஆக்சிஜனின் உற்பத்தியை அதிகப்படுத்தி அதை அரசாங்கத்திற்குக் கிடைக்கச் செய்வதையும் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்